| Details description |
|---|
|
Details : Book Name : Sanga Illakiyam Udal Manam Mozhi Regional Name : சங்க இலக்கியம் உடல் மனம் மொழி Author : சக்தி ஜோதி Edition : 1st Edition ISBN : 9788199181953 Category : Essay Binding : Paper Binding Language : Tamil Publishing Year : 2025 Pages : 488 Code No : A5582 சங்க இலக்கியம் : “தமிழ் இலக்கிய ஆய்வு வரலாற்றில் ஒரு கருத்தையோ, ஒரு ஆய்வுப் பொருளையோ எடுத்துக்கொண்டு அதை சமூகவியல், மானிடனியஸ், உளவியல், இலக்கியவியல், பெண்ணியப்பார்வை என்று பல துறைகளின் வழியாக ஆராய்ந்த ஆய்வுகள் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். சங்கப்பாடல்களில் “பெண்ணை முன்னிலைப்படுத்திய பண்பாட்டு உருவாக்கம்” என்ற கருத்தை ஆய்வுப்பொருளாகக் கொண்டு வரலாற்றியல், உயிரியல், சமூகவியல், உளவியல், தொல்காப்பிய இலக்கியவியல், கூற்றியல் என்ற பல்துறை நோக்கில் ஆராயப்பட்ட முதல் நூலை உருவாக்கியவர் சக்தி ஜோதியே எனலாம். இந்த நூல் தமிழ் இலக்கிய ஆய்வு வரலாற்றில் ஒரு மைல்கல்.” பேரா.முனைவர்.எல். இராமமூர்த்தி, மொழியியல் துறை, கேரள மத்தியப் பல்கலைக்கழகம். “இரண்டாயிரமாண்டு காலத் தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கிட அடிப்படையாக விளங்குகிற சங்கப்பாடல் வரிகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல் வேண்டியது அவசியம். கவிஞர் சக்தி ஜோதி எழுதியுள்ள ‘சங்க இலக்கியம் உடல் மனம் மொழி’ எனும் இந்நூல், பொதுமக்களிடம் தமிழ் அடையாளத்தை முன்வைத்திட பெரிதும் உதவும். அதேவேளையில் இந்த நூல் கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும். சங்க இலக்கிய ஆய்வில் புதிய தடம் பதித்திட முயன்றுள்ள சக்தி ஜோதியின் விமர்சன நூல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.” ந.முருகேசபாண்டியன், |
Login to your account.Don’t have account? Sign up