| Details description |
|---|
|
Details : Book Name: indhiyaviyal Munnodi Pera.ra.Vijayalakshmi Regional Name: இந்தியவியல் முன்னோடி பேரா.ர.விஜயலட்சுமி Author: இரா.அறவேந்தன் (நெறியாளுகை) இ.சு.அஜய்சுந்தர் (பதிப்பாசிரியர்) Edition: 1st Edition ISBN: 978-81-987122-8-8 Category: Essay Binding: Paper Binding Language: Tamil Publishing Year: 2025 Pages: 148 Code No: a5440 பேரா.ர.விஜயலட்சுமி : பேரா.ர. விஜயலட்சுமி அவர்கள், இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் படித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்துவருபவர். திராவிடச் சொற்பிறப்பியல் அகராதியின் இணையாசிரியர் பேரா. தாமஸ் பரோ அவர்களின் நெறியாளுகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர். இலங்கையைச் சார்ந்த சமஸ்கிருத அறிஞரான கைலாசநாத குருக்கள் இவரது வழிகாட்டி. அண்மையில் மறைந்த ஆய்வாளர் ராஜ் கௌதமன் இவரது நெறியாளுகையில் முனைவர் பட்டம் மேற்கொண்டவர். சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ் பெற்றவை உரக்கப் பேசப்பட்டு, தமிழிலிருந்து சம்ஸ்கிருதம் பெற்றவை வசதியாக மறக்கடிக்கப்படும் சூழலில் தமிழ்-சம்ஸ்கிருத உறவு இருவழியானது என்பதைப் பல்வேறு சான்றுகள் கொண்டு நிறுவுகிறார் இவர். இவரின் ஆய்வு. பதிப்பு,கற்பித்தல் ஆகிய திறன்களை இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்நூல் அமைகிறது. |
Login to your account.Don’t have account? Sign up