| Details description |
|---|
|
Details : ISBN : 9788123407173 Author : P. Sankaran I.A.S Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A1095 என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும் : தெய்வ பக்தியும் சீலமும் நிறைந்த ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் தோன்றி. ஒழுக்கத்தோடும் நற்குணங்களோடும் வளர்ந்து, பல பெரியோர்களின் ஆசியாலும் ஆதரவாலும் கல்வி பயின்று. அரசின் மிக உயர்ந்த பதவிகளில் நேர்மையும் மனிதநேயமும் சிறக்கப் பணியாற்றி நிறைவாழ்க்கை வாழ்ந்து மறைந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வாழ்க்கை வரலாறே இந்நூல். மனிதனின் கடமை, அன்பு, பண்பு. பாசம், கட்டுப்பாடு ஆகியவற்றிலான அறவாழ்வையே அனைத்து மதங்களின் உபதேசங்களும் மனித மனங்களில் தெள்ளத் தெளிவுடன் அள்ளி விதைத்தன. மனிதநேயப் பயிர் வளர்க்க முனைந்தன. அத்தகு சிந்தனைகளின் இழையோட்டமே இந்நூல் முழுவதிலும் விரவிக் கிடக்கின்றன. நற்பண்புகளையும் உயரிய சிந்தனைகளையும் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூல் இளைய சமுதாயத்தினர் படித்துப் புத்துணர்வும் தன்னம்பிக்கையும் பெறுவதற்குப் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது. |
Login to your account.Don’t have account? Sign up