| Details description |
|---|
|
Details : ISBN : 9788123444253 Author : Dr. K. Murugesan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Code no : A4779 ஆசிரியரைப் பற்றி… சங்ககாலத் தமிழரின் சமூக வாழ்வும் கலைத்திறனும் : முனைவர் கி.முருகேசன், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், பொன்னன் விடுதி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ரெ.கிருஷ்ணன் – சரசு தம்பதிகளுக்கு முத்த மகனாக 05.06.1987இல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை வெட்டன்விடுதி |அரசுப்பள்ளியிலும் பயின்றவர். மேல்நிலைக் கல்வியை ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்த பின்னர், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் இளங்கலைத் தமிழ் (2007) இலக்கியப் பட்டம் பெற்றார். அதன் பிறகு தமிழ் இலக்கியக் கல்விப் பேற்றை முழு நேரமாகக் கற்க விரும்பியவர், புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் (2009), ஆய்வியல் நிறைஞர் (2010 மற்றும் முனைவர் (2014) ஆகியப் பட்டங்களைப் பெற்றவர். அப்போதைய தமிழக ஆளுநர் மேதகு ரோசையா அவர்களின் பொற்கரங்களால் “பத்துப்பாட்டில் வாழ்வியற் செய்திகள்” என்னும் பொருண்மையியல் ஆய்வு செய்தமைக்காக முளைவர் பட்டம் பெற்றவர். 2014-ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகவும் உதவித் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணியாற்றி வருகிறார். இவரது முதல் நூல் ‘சங்கத் தமிழரின் அடிப்படை வாழ்வியல்’ என்ற நூலாகும். 25க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் 20க்கும் அதிகமான தமிழ் இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் சிறுகதைகளை எழுதி வரும் இவர், படைப்புத் தளத்தில் தன்னை நிலைநிறுத்தப் போராடி வரும் இளம் படைப்பாளியாகவும் விளங்குகிறார். |
Login to your account.Don’t have account? Sign up