| Details description |
|---|
|
Details : ISBN : 9788123427515 Author : Iraa.TamilSelvan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 208 Code no : A3098 திருக்குறள் : கருத்துப்புலப்பாட்டிற்கு மொழி எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பது குறித்த ஆய்வுகள் விரிவாக நடந்தேறியுள்ளன. திருக்குறள் அதற்கு விதிவிலக்கன்று. ஆனால், அதன் புலப்பாட்டுத்திறனை அணியியல் நோக்கில் ஆய்வு செய்தது குறைவாகவே (நூல்கள் 4. கட்டுரைகள் 8) உள்ளது என்பதை இந்த நூல் வழி அறிய முடிகிறது… திருக்குறள் உரையாசிரியர்கள் 107 குறட்பாக்களில் (மணக்குடவர் 2, பரிப்பெருமாள் 3, பரிமேலழகர் 102) அணி பயின்றுவருவதாகக் குறிப்பிடுவர் என்பது இந்த நூல் வழியறியலாகும் செய்தியாகும். இத்துறையில் ஆய்வு நடத்திய தமிழறிஞர் இ.சுந்தரமூர்த்தி, 445 குறட்பாக்களில் அணி இடம் பெறுவதை விளக்குவார். அவற்றுள் சில பரிமேலழகர் உரையிலும் இடம் பெறக்காணலாம். இவர்கள் குறிக்காது விட்ட 69 குறட்பாக்களையும் அவற்றுள் இடம்பெறும் அணிகளையும் சுட்டிக்காட்டி இந்த நூல் புதுமை படைத்துள்ளது. அவற்றைச் சுட்டிக்காட்டிய கட்டுரையாளர்களின் ஆய்வுத்திறன் பாராட்டுக்குரியது. இதை வெளிக்கொணர்ந்த, இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள அட்டவணைகள் ஒரு தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றன எனலாம். இத்தளத்தில் ஆய்வு மேற்கொள்ள விரும்புவோருக்கு இவை தக்கதொரு வழிகாட்டியாக அமையும்…அடித்தளமிட்ட… தமிழியல் ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பேரா.இராம.சுந்தரம் |
Login to your account.Don’t have account? Sign up