| Details description |
|---|
|
Details : ISBN : 9789388050708 Author : Prof P. Muthukumaran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A4025 இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு : இந்திய ரயில்வே போக்குவரத்துப் பரிணாம வளர்ச்சியின் காலச்சக்கரத் தடத்தில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அவ்வரலாற்றை விரிவாகவும் ஆழமாகவும் எளியநடையில் விவரிக்கிறது. இந்திய ரயில்வே சேவையின் தொடக்க காலங்களில் ரயில் இயக்கம் என்பது பாமர இந்தியனுக்கு அச்சமூட்டுவதாய் இருந்தது; கறுப்பு நிற பூதம் வெண்புகையைக் கக்கிக்கொண்டு சக்கரக் கால்களில் உருண்டு விரைந்து விழுங்க வருவதாக மனிதர்கள் நடுங்கினர்: அச்சமூட்டும் ‘எதுவும். ‘சாமி’தான் மனிதனுக்கு: ‘ரயில்சாமி’ என்ற பெயரெல்லாம் வைக்கப்பட்டிருந்ததை மக்கள் தொகைத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் வெகு குறுகிய காலத்திலேயே அவ்வச்சத்தை வெற்றி கொண்ட பாமர இந்தியன் இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தத் தொடங்கினான். ‘ஆங்கிலேயர்களுக்காக’ என்றிருந்த இந்திய ரயில்வேயை, தனது போராட்டங்கள் மூலம் ‘இந்தியர்களுக்காக’ என வென்றெடுத்த சுவையான வரலாற்றை இந்நூலில் வாசித்தனுபவிக்கலாம். |
Login to your account.Don’t have account? Sign up