| Details description |
|---|
|
Details : ISBN : 9788123426112 Author : S. V. Rajadurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Code no : A2958 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : தமிழகத்தில் மட்டுமின்றி, அனைத்திந்திய அளவிலும் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் சிறிதும் ஊறு விளையாதபடி பலவகையான பூச்சுவேலைகள் மூலம் அனைத்து சமூகக் கேடுகளையும் போக்குவதாகக் கூறிக்கொள்ளும் போலி சமூக மருத்துவர்களுக்குக் குறைவில்லை. ஆகவேதான் முன் எப்போதையும்விட மார்க்ஸும் எங்கெல்ஸும் நமக்கு இப்போது தேவைப்படுகின்றனர். நாம் எதிர்கொள்ளும் கேள்வி, வெளிகுலாப் புரட்சியாளர் ஹ்யூகோ சாவேஸ் கூறியதுபோல, “சோசலிசமா, மனிதகுலத்தின், இந்தப் புவிக் கோளத்தின் மரணமா?’ என்பதுதான். உலக முதலாளித்துவப் பொருளாதாரம், மனிதகுலம் அனைத்துக்குமான ஒரே வாழ்வாதாரமான சூழலியலையே அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நமது விடுதலைக்கு வேண்டியது வெறும் அரசியல் மாற்றமல்ல, மாறாக, ஒட்டுமொத்தமான சமுதாய மாற்றமே என்பதை 1848-ஆம் ஆண்டிலேயே உலகிற்கு அறிவித்த ஈடிணையற்ற அரசியல், தத்துவ, பொருளாதார, பண்பாட்டு ஆவணமே ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’. அந்த ‘அறிக்கை’யைப் படிப்பதால் மட்டுமே உலகத்தை மாற்றிவிட முடியாது; ஆனால், அதை வாசிப்பது உலகை மாற்றியே தீர வேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும். ‘அறிக்கை’யின் தோற்றம், அது மேற்கொண்ட பயணங்கள், உலக மக்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைப்பதுடன் பத்திக்குப் பத்தி விரிவான விளக்கங்களையும் வழங்கியுள்ளார் எஸ்.வி.ராஜதுரை. ‘அறிக்கை’க்கு மார்க்ஸும் எங்கெல்ஸும் எழுதிய எழு முன்னுரைகள், மாறிவரும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப ‘அறிக்கை’, ஏன் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும், ‘மறு வாசிப்பு’க்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டிகளாக அமைகின்றன. |
Login to your account.Don’t have account? Sign up