| Details description |
|---|
|
Details : Book Title : ஓ கனடா யாவரும் கேளிர் Category : History ISBN : 9788123444802 Author :P. Muthukumaran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2023 Pages : 682 Code no : A4843 ஓ கனடா யாவரும் கேளிர் : என்றென்றுமே கனடா 90 காலனிய நாடு என்றுதான் அறியப்பட்டுள்ளது. முதலில் பிரெஞ்சுக் காலனி, பிறகு பிரிட்டிஷ் காலனி, தற்போது அமெரிக்கக் காலனி என்பர். கனடாவின் அதீத குளிரை, நிலவமைப்பை எப்போதுமே எதிர்கொண்டு களேடியர்கள் போராடும் நிலையுள்ளது. அதுபோன்றே பிரிட்டனையும், அமெரிக்க ஒன்றியத்தையும் எதிர்த்தும் கனேடியர்கள் முதலில் போராடுவர்; காலப் போக்கில் தொலைநோக்குப் பார்வையோடு ஒத்துப் போயிடுவர். இந்தக் கனேடிய இயல்பை இந்நூல் படிப்படியான பரிணாம வளர்ச்சியாகக் காட்டுகிறது. விரல்விட்டு எண்ணிடக்கூடிய கனேடிய அரசியல் தலைவர்களின் முயற்சியினால் 1867இல் டொமினியர் ஆஃப் கனடா பிறந்தது. அப்பொழுது ஆண்டாரியோ, கொபெக், நோவாஸ்கோசா, நியூபிரன்ஸ்வெக் மட்டுமே இணைந்திருந்தன. பரிணாம வளர்ச்சியின் காரணமாக இன்றைக்கு கனடாவின் பரந்த எல்லைகள் என தெற்கே அமெரிக்க ஒன்றியமும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், வடக்கே வடமுனையும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றியத்தின் அலாஸ்காவும் உள்ளன. இந்தப் பரிணாம வரலாற்றைத் தொடக்கம் முதல் இந்நூல் எடுத்துரைக்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up