| Details description |
|---|
|
Details : Author : எஸ்.ஜெயசீல ஸ்டீபன் Edition : 1st Edition ISBN : 978-81-988443-4-7 Category : Essays Binding : Paper Binding Language : Tamil Publishing Year : 2025 Pages : 128 Code No : A5550 தமிழ் இலக்கிய வரலாறு : இந்த நூல் புதுச்சேரியில் இயற்றி அரங்கேற்றிய ஞானாதிக்கராயர் காப்பியம் (1774). மற்றும் தோன்றிய பல சிற்றிலக்கியங்களான புதுவை அருணாசலம் பிள்ளைத்தமிழ், அரும்பாத்தை விநாயகம் பிள்ளைத்தமிழ், ஆனந்தரங்கன் கோவை.பாப்பையா பிள்ளை உலாமடல். புதுவைத் திரிபுரசுந்தரி அம்மை பிள்ளைத்தமிழ் பற்றி ஒரு இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் அலசி ஆராய்கிறது. ஆங்கிலேயர் தொடர்பால் சென்னைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த புதுவை வித்வான் சாமிநாதப் பிள்ளை மற்றும் புலவர்களான முத்துசாமிப் பிள்ளை. ஞானப்பிரகாச முதலியார். நயனப்ப முதலியார் ஆற்றிய அரிய தமிழ் இலக்கியப் பணியை விரிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் வாழ்ந்த வித்வான் சவராயலு நாயகர். மரிய சவேரிப் பிள்ளை. நாராயணசாமி முதலியார், சவேரிநாத முதலியார். ஆரோக்கியசாமிப் பிள்ளை. துரைசாமி முதலியார் ஆற்றிய சீரிய தமிழ் இலக்கியப் பணியை தெளிவாக விளக்குகிறது. புலவர்கள் மற்றும் புரவலர்களின் தமிழ்த் தொண்டும். காலனியத் தொடர்பும், அவற்றின் மூலம் ஏற்பட்ட தாக்கமும் இந்நூலில் புதுமையாக ஆராயப்பட்டுள்ளது. முன் அட்டைப்படம்: புதுச்சேரி மாதாகோவில் அச்சுக்கூடத்தில் 1855ல் உருவாக்கப்பட்ட புதிய வகை எழுத்துருக்கள் (எக்சான்புராவன்சு ஆவணக்காப்பகம், பிரான்சு) |
Login to your account.Don’t have account? Sign up