| Details description |
|---|
|
Details : Category : History ISBN : 9788123439921 Author :M. Ramaswamy Weight : 100.00gm Binding : paper back Language : Tamil Publishing Year : 2020 Pages : 628 Code no : A4305 1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும் : “1954 ராதா நாடகத் தடையும் ராதா நாடகச் சட்டமும்’ என்று மின்னலும், இடியும், தொடரும் மழையுமாக ஒன்றிற்கொன்று தொடர்புடைய மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் பின்புலத்தைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறது இந்த நூல்! இன்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன், 1054 டிசம்பரில், கற்றல் கற்பித்தலுக்கான ஆற்றல்மிகு சமூகக் கலைப் படைப்பான நாடகக்கலை எனும் தகவல் ஊடகத்தைத் தன் கட்டுப்பாட்டின்கீழக் கொண்டுவரும் கருத்தோடு, டிச.2(கலவரம்). டிச.18 கைது). மற்றும் டிச.20 (சட்டம்) ஆகிய தேதிகளில் மேற்கொண்டிருந்த அரசு நடவடிக்கைகளின் முன்பின் தொடர்ச்சிகளை விவாதித்திருந்த, அன்றைய ‘விடுதலை’ இதழ்ப் பதிவுகளின் ஆவணமாகும் இது நிகநாடக இயக்கத்தின் 42 ஆவது ஆண்டு நிறைவும். என் செண்பகத்தின் 22 ஆவது ஆண்டு நினைவும் இணைந்து என்னைச் செயற்படுத்த உத்வேகம் தரும் பொழுதாகும் இது மாமேதை காரல் மார்க்ஸின் நினைவு நாளும் அது நான் செயற்பட்டுக் கொண்டே இருக்கிறேன் என்பதை என் செண்பகத்திற்கு மானசீகமாய் நான் படைத்தனுப்புகிற ஒரு படைப்புப் பகிர்வு இது! என்னை எழுதத் தூண்டிக் கொண்டேயிருக்கிற என் செண்பகம், என் நட்புகள், நாடக உறவுகள். தோழமைகள், என் உறவுகள் அத்தனைப் பேருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். முகப்பை அழகாக்கிய சொ.நீலகண்டன், கா.குணசேகரன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவன ஊழியர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணனுக்கும் என் நன்றி. மு.ரா. |
Login to your account.Don’t have account? Sign up