| Details description |
|---|
|
Details : ISBN : 9788123409375 Author : Elasai Manian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 1977 Code no : A1360 பாரதி தரிசனம் : இந்திய தேசிய இயக்கம் தீவிரவாதத் திசைவழியில் [வேகமாக முன்னேறிவந்த கட்டத்தில், பாரதி ஏககாலத்தில் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியப் பொறுப்பையும் ஏற்று முழுமையாகப் பாடுபட்டு வந்தான், இது வியக்கத்தக்கதொரு செய்தியாகும். சொல்லப்போனால், கவிதைத்துறையிலும் சரி, பத்திரிகைத்துறையிலும் சரி, பாரதி முழுமூச்சாகவும் தீவிரமாகவும் ஓய்வு ஒழிவில்லாமலும் பாடுபட்டு வந்த காலமே இந்த பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்த நாலைந்து ஆண்டுக்காலம்தான் எனலாம். எனவே இந்தப் பத்திரிகைகளில் பாரதி எழுதியவை அனைத்தையும் தெரிந்துகொள்வது பாரதியின் வளர்ச்சியை அவனது காலத்தின் பின்னணியில் புரிந்துகொள்ள உதவும் என்பது சொல்லாமலே விளங்கும். பாரதி ஆசிரியப் பொறுப்பேற்றிருந்த ஏனைய பத்திரிகைகளைக் காட்டிலும், வேகமும் விறுவிறுப்பும் மிக்கதாக விளங்கிய பத்திரிகை என்பதோடு மட்டுமல்லாமல் ‘இந்தியா’ ஒன்றுதான் ஒப்புநோக்கில் அதிக காலம் நடந்த பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் பல பிரதிகள் கல்கத்தா தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. என்றாலும், இந்தப் பத்திரிகைகளின் பிரதிகள் அனைத்தும் துர்ப்பாக்கியவசமாக நமக்கு இன்னும் கிட்டவில்லை. பாரதி அன்பர்கள் பலரது வேட்டையினாலும், முயற்சியினாலும் அவற்றில் சிற்சில அகப்பட்டதோடு, அவை தமிழ் மக்களின் பார்வைக்கும் கிட்டியுள்ளன. எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர்சங்கத் தோழர்களோடு இளசைமணியன் முன்னின்று சாதித்துள்ள இந்த அருஞ்சாதனையின் வளர்ந்தோங்கும் பெருமை, இதன் ஆதார பலத்தின் மீது பாரதியைப் பற்றிய பல ஆராய்ச்சி உண்மைகள் வெளிவரும் போதுதான் புலப்படும். -ரகுநாதன் |
Login to your account.Don’t have account? Sign up