| Details description |
|---|
|
Details : Edition : 2 Category : Sirunool Varisai Author : S.A. Perumal Binding : Paper Back Weight : 100.00gm Publishing Year : 2024 Language : Tamil Pages : 32 Code no : A1364 ஆதி பொதுவுடைமைச் சமூகம் : மார்கனின் சமுதாய வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய கருத்துக்களை முறைப்படுத்திய எங்கெல்ஸ், சமுதாயம் முன்னேற்றம் காணவேண்டிய வளர்ச்சிப் படிநிலைகள், வளர்ச்சிக் கட்டங்கள் ஐந்தெனக் கண்டார். அவை முறையே புராதனப் பொதுவுடைமைச் சமூகம். அடிமைச் சமூகம்.. நிலமானியச் சமூகம், முதலாளித்துவ சமூகம். சோஷலிசச் சமூகம் என்பன. எஸ்.ஏ. பெருமாள் முதல் இரு சமூகங்கள் பற்றி இரு நூல்கள் எழுதியுள்ளார். ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் கூட்டு வாழ்க்கை அமைந்த பான்மை, குடும்ப அமைப்பு. உழைப்புப் பிரிவினை. பெண்ணின் தலைமை அவள் தலைமை வீழ்ச்சி பெற்று ஆண் ஆதிக்கத் தோற்றம், அரசின் தேவை. அதன் தொல் வடிவங்கள். தனிச் சொத்து வகித்த பாத்திரம் என்பன பற்றியெல்லாம் பொதுவுடைமைச் சமூகம் என்னும் நூலில் எடுத்துக் கூறியுள்ளார். இக்கால வரலாற்றாளர் இதனை உலோகக் காலம். பழங்கற்காலம், புதுக் கற்காலம், பெருங் கற்காலம் என்னும் பிரிவுகளாகக் காண்பர், தொல் சமூகம் மாறி முதல் வர்க்க சமுதாயமாக அடிமைச் சமுதாயம் தோன்றுவதற்கான காரணங்கள். மக்கள் அடிமைகளான வழிகள், அடிமைகள் நடத்தப் பெற்ற அவலம். பட்ட துன்ப துயரங்கள் இவற்றை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டங்கள் – சிகரம் வைத்தாற்போன்று ஸ்பார்ட்டகஸ் எழுச்சி – ஆகியவை பற்றி அடிமைச் சமுதாயம் என்னும் நூலில் விளக்கிக் கூறுகிறார். |
Login to your account.Don’t have account? Sign up