| Details description |
|---|
|
Details : Author : R. Edwin ISBN : 9788123443157 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 60 Code no : A4668 காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும் : தமது ஆசிரியப் பணியையும் வாழ்வையும் பிரித்தறியாத தோழர் இரா. எட்வின் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே இருக்கும் உறவினை,மெல்லுணர்வோடு மிக நுட்பமாக தம் எழுத்துக்கள் மூலம் பதிந்து வருபவர். இந்நூலில் இப்ப இவ ஏழாம்ப்புல தான படிக்கணும்…. என்று தன் குழந்தையின் கல்விக்காக உரிமைக்குரல் எழுப்பும் தாயை கண்முன் நிறுத்தும் ஆசிரியர், காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும் என்ற கட்டுரையில், தங்குதடையின்றி கல்வி பயிலும் சமூகம் ஒருபுறம், கல்வி மறுக்கப்படும், கிடைத்தாலும் ஏற்கத் தயங்கும் மனநிலையில் தவிக்கும் சமூகம் ஒருபுறம் என நாணயத்தின் இருபக்கங்களாக விளங்கும் நமது கல்வி அமைப்பை கண்முன்னே நிறுத்துகிறார். இம்மண்ணின் குழந்தைகள் மருத்துவம் பயில, காமராசர் உருவாக்கிய தஞ்சை மருத்துவக் கல்லூரி வரலாற்று உண்மையை சுவைபட விவரிக்கும் ஆசிரியர். இன்று நீட் தேர்வு முறை எளிய குழந்தைகளின் அறிவை முடக்குவதையும் இம்மண்ணின் குழந்தைகளின் மருத்துவ வாய்ப்புகள் அண்டை மாநிலங்களுக்கு பறிபோகும் ஆபத்தையும் ராஜன் குழு பரிந்துரை மூலம் விரிவாகப் பதிகிறார். கட்டுரைகள் ஒவ்வொன்றும் மாணவர், ஆசிரியர், பெற்றோர், அரசின் கடமை, கல்விக்கான உரிமை குறித்து நம்மோடு பேசுகிறது எனலாம் கலைமணி |
Login to your account.Don’t have account? Sign up