| Details description |
|---|
|
Details : Category : Essay ISBN : 9788194492177 Author : D. Raja Weight : 100.00gm Binding : paper back Language : Tamil Publishing Year : 2020 Code no : A4290 இந்தியப் புரட்சி : “இந்தியப் புரட்சி என்பது பொருளாதாரப் புரட்சி மட்டுமன்று. அது முதலாளி தொழிலாளி பிரச்சினை மட்டுமல்ல. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் நடைபெறுகிற போராட்டம் மட்டும் புரட்சி அல்ல. சமூக நீதிக்கானப் போராட்டத்தில், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில், ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்விடுதலைப் போராட்டங்களில் வெற்றிபெறும்போது மட்டுமே இந்தியப் புரட்சி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். “பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறும்போது, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறும்போது, ஜாதி மத வித்தியாசம் இல்லாமல், ஆண் பெண் அசமத்துவம் இல்லாமல் நாமெல்லாம் மனிதர்கள் என்று மானுடம் வெற்றி பெறும்போது மட்டுமே இந்தியாவில் புரட்சி வெற்றிபெறும் என்று நான் வருவாகக் கருதுகிறேன். “அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாம் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். மக்களிடம் செயல்படவேண்டும். ஏனென்றால் மக்கள் இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது. மக்கள்தான் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள். மக்கள்தான் சரித்திரத்தை மாற்றுகிறார்கள். நாம் மக்களுக்காக வேண்டித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். “இதற்குப் பொருள் மக்களை வணங்கிக்கொண்டு பின்னே நிற்க வேண்டும் என்பது அல்ல. மக்களுக்கு வழிகாட்டுகிற அதே நேரத்தில். மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களிடம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அணுகுமுறையோடு நாம் செயல் பட்டால் இந்தியாவுக்குத் தேவையான ஒரு மாற்றை முன்வைப்பதற்கு நமக்குச் சாத்தியப்படும். நாம் வெற்றி பெறமுடியும் என நான் திடமாகக் கருதுகிறேன்.” து.ராஜா பொதுச்செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி |
Login to your account.Don’t have account? Sign up