| Details description |
|---|
|
Details : Category : Marxism Edition : 1 ISBN : 9788195300464 Author : Werner Bonefeld, Richard Gunn Translator : P.K.Rajan, Ma.Sivakumar Binding : Hard Bound Weight : 150gm Publishing Year : 2024 Language : Tamil Pages : 284 Code no : A4928 இயக்கவியலும் வரலாறும் : வெர்னர் போன்ஃபெல்ட் : யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். எடின்பர்க், மார்புர்க் மற்றும் பெர்லின் ஃப்ரீ பல்கலைக் கழகங்களில் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். ஃபிராங்க்ஃபர்ட் எழன்பர்க் பல்கலைக் கழகங்களிலும் பணிபுரிந்துள்ளார். கான்ஃபரன்ஸ் ஆஃப் சோசியலிஸ்ட் எகனாமிஸ்ட் – இல் செயல்பட்டார். கேப்பிடல்&கிளாஸ் இதழின் ஆசிரியர்குழு உறுப்பினராகவும் காமன்சென்ஸ் ஆசிரியன் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.த சேஜ் ஹேண்ட் புக் ஆஃப் ஃபிராங்க்ஃபர்ட் ஸ்கூல் கிரிடிகல் தியரி-ன் இணை ஆசிரியர். ரிச்சர்ட் குன் : எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறையில் அரசியல் கோட்பாட்டு விரிவுரையாளராக இருந்தார், கான்ஃபரன்ஸ் ஆஃப் சோசலிஸ்ட் எகனாமிஸ்ட்ஸ் என்ற அமைப்பில் செயல்பட்டார். கேப்பிடல் & கிளாஸ்-ன் ஆசிரியர் குழவிலும் காமன் சென்ஸ்-ன் ஆசிரியர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். காஸ்மாஸ் சைக்கோபீடிஸ் ஏதென்ஸ் பல்கலைக் கழகத்திலும் ஃபிராங்க்ஃபர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்தவர். க்யோட்டிங்கன் பல்கலைக் கழகத்திலும் ஏதென்சில் உள்ள அரசியல் விஞ்ஞானத்துக்கான பான்டியோஸ் பள்ளியிலும் பேராசிரியராக இருந்தவர். ஏதென்ஸ் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறையில் பேராசிரியர் பதவியில் உள்ளார். ப.கு.ராஜன் : மின் பொறியியல், நிர்வாகவியல் கல்வி மற்றும் 30 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளவர். ‘புரட்சியில் பகுத்தறிவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.’லத்தின் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்தநாளங்கள் உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர். சுமார் 30க்கும் மேற்பட்ட நூல்களின் பதிப்பாசிரியர், மார்க்சிய செயல்பாட்டாளர். மா.சிவகுமார் : பொறியியல் பட்டதாரி. மார்க்சிய அரசியல் செயல்பாட்டாளர், ஸ்டீவன் வெய்ன்பெர்கின் முதல் மூன்று நிமிடங்கள். ஜான் ஸ்மித்தின் 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் ஆகிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். |
Login to your account.Don’t have account? Sign up