| Details description |
|---|
|
Details : ISBN : 9789388973021 Author : Dr.Senbagam Ramaswamy Weight : 100.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2019 Pages : 72 Code no : A4088 கண்ணன் பாட்டு : லூமியர் சகோதரர்கள் உலகின் முதல் திரைப்படத்தை பாரீஸில் திரையிட்டு மகிழ்ந்துகொண்டிருந்த நினைவு நாள் டிசம்பர் 28 இல் இங்கு -மதுரையில் மலர்ந்து, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடக் குரலெழுப்பிய காரல் மார்க்ஸின் நினைவு நாளான மார்ச் 14 இல் மதுரையில் முடிந்து போனவரி புற்றுநோயின் கொடூரம் ஓராண்டு காலம் அவரை உருக்கித் தின்றது. 37 ஆண்டுக் காலம் மதுரை பாத்திமா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் நல்ல ஆசிரியராய்ப் பணிபுரிந்தவர். மனிதர்களை மதிக்கக் கற்றவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறளின்பால் தான் கொண்டிருந்த ஈடுபாட்டிற்குக் கொஞ்சமும் குறையாமல் நவீனத் தமிழ் இலக்கியத்தையும் மதித்தவர். தானே இலக்கியப் படைப்பாளியாய் மிளிர்ந்தவர்! இவரின் ‘முதல் மனிதனும் கடைசி மனிதனும்’ சிறுகதைத் தொகுப்பு அதை அடையாளப்படுத்தும். இவரின் ‘மதுரையும் மல்லிகைப் பூவும்’ சிறுகதை *Contemporary Tamil Short Fiction’ என்கிற திலிப்குமாரின் தொகுப்பில் ‘jasmine’ எனும் பெயரில் வசந்த சூரியாவால் ஆங்கிலமாக்கப்பட்டுள்ளது. அதைப்போல், இவரின் சிறுகதை ‘சரோசாதேவியின் கதை’, சுபஸ்ரீ கிருஷ்ணசாமியால் ஆங்கிலமாக்கப்பட்டு The Tamil Story – Through the times, through the tides’ என்கிற திலிப்குமார் தொகுப்பில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தகுந்தது. ஆய்விற்காகக் கிரேக்க மொழி படித்தவர். அவரின் முனைவர் பட்ட ஆய்வேடு, ‘கிரேக்க விரிக் கவிதைகளும் சங்க இலக்கியக் கவிதைகளும் – ஒப்பீடு’, தமிழ் ‘ஒப்பியல் இலக்கியத்துறைக்கான சிறந்த பங்களிப்பாக என்றும் விளங்கும். நாடகத்தில் இய ல்பாகவே ஆர்வம் கொண்டவர். கிரேக்க நாடகங்கள் சிலவற்றை மொழிபெயர்த்தும், கல்லூரி விழாக்களுக்கான நாடகங்கள் பலவற்றை எழுதியும் வைத்திருந்தவர். என்னின் ‘துர்க்கிர அவலம்’ நாடகத்தில் நடித்தும் எனக்கு உதவியவர். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒரு மாதம் தங்கியிருந்து ‘திரைப்பட ரசனை’ பற்றித் தெரிந்து தேர்ந்து வந்தவர்… |
Login to your account.Don’t have account? Sign up