| Details description |
|---|
|
Details : ISBN : 8123410387 Author : K.Palanithurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Code no : a1465 Pages : 40 மாவட்ட ஊராட்சி நிர்வாகம் விளக்கக் கையேடு : முனைவர் சு.பழனித்துரை அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கிராமியப் பல்கலைக்கழகம் மூலம் விழிப்புணர்வுப் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகிறார். ஊராட்சி அமைப்புகள் உயிர்த்துடிப்புடன் இயங்கிட அயராது முயன்றுவருகிறார். புதிய பஞ்சாயத்து அரசாங்கம் ஆற்றவேண்டிய பணிகள்பற்றி மக்கள் தலைவர்களுக்கும் அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்துவருகிறார். தேசிய மற்றும் உலக அளவில் ஏராளமான கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். பத்திரிகைகள். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இவரது பங்கேற்புகள் ஏராளம். பஞ்சாயத்துகளைப் பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50க்கு மேற்பட்ட நூல்களும் ஆய்வுக்கட்டுரைகள், கருத்தரங்குக் கட்டுரைகள் உட்பட 200க்கு மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகப் பரிசு பெற்றுள்ளன. ஹார்டுவார்டு பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை பகுப்புகளுக்கான பாடத்திட்ட நூல்களாகவும் உள்ளன. நூலாசிரியரின் நற்பணிகளுக்கு மத்திய அரசு, மாநில அரசு, மாநிலத் திட்டக்குழு போர்டு நிறுவனம். இந்திய மக்கள்தொகை நிறுவனம். டேனியா, ராஜீவ்காந்தி அறக்கட்டளை, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவருகின்றன. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆய்வுக்காகச் சென்று வந்துள்ளார். பல்கலைக்கழகங்கள் உட்பட 24க்கு மேற்பட்ட அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். ஊராட்சி அமைப்புகளை மக்கள் இயக்கமாகவும் வளர்ச்சி இயக்கமாகவும் மாற்றுகின்ற உயர்ந்த நோக்கத்தில் இந்நூலை ஆசிரியர் உருவாக்கியுள்ளார். |
Login to your account.Don’t have account? Sign up