| Details description |
|---|
|
Details : ISBN : 9788123419213 Author : Dr. R. Kamarasu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2011 Code no : A2292 Pages : 376 பேராசிரியர் நா. வானமாமலை : நா.வானமாமலை நாட்டார் பாடல்கள் சேகரிப்பில் புகுந்து, தமிழில் ‘நாட்டார் வழக்காற்றியல் ஆய்வின் தந்தை’ எனப் போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தார். தமிழகச் சமூக வரலாறு, பண்பாடு,மெய்யியல் வளர்ச்சி பற்றியெல்லாம் மிகச் சிறந்த கட்டுரைகளை வரைந்துள்ளார். நவீன தமிழ்ப் படைப்பிலக்கிய விமர்சனத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய ‘ஆராய்ச்சி’ இதழ் தமிழியலில் புது வழித்தடத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய பல பெருமைகளுக்குரிய தமிழக மார்க்சியப் புலமையாளரின் வாழ்வையும், படைப்புகளையும் இந்நூல் ஆழ்ந்து ஆராய்கின்றது. இந்நூல் இரா.காமராசு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வு ஆகும்; திருந்திய வடிவில் நூலாக்கம் பெற்றுள்ளது. இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் இரா.காமராசு இன்று மாநிலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்; உழைக்கும் மக்கள் போராட்டத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளுபவர். |
Login to your account.Don’t have account? Sign up