| Details description |
|---|
|
Details : Author: மாற்கு Edition: 1st Edition ISBN: 978-81-985262-6-7 Category: Bio Graphy Binding: Hard Bound Language: Tamil Publishing Year: 2025 Pages: 510 Code No: A5407 பேருவகை : கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வரும் மாற்கு, நெடிய துறவற வாழ்வினைப் பேறாகப் பெற்றவர். தொடக்க காலம் முதல் இன்று வரையிலும் தலித் மக்கள், பெண்கள், உதிரித் தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகப் பெரும் பங்காற்றி வருபவர். சமூக வாழ்வின் பற்றுக்கோடாய் விளங்கும் மதங்களின் வலிமையை உணர்ந்தவரான மாற்கு, மதத்தைக் கடந்த மக்களுக்கான ஆன்மீகத்தைத் தேடும் தனது நீண்ட பயணத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவரது இந்தத் தன்வரலாற்று நூல் உறுதி செய்துள்ளது. சாதியம், மேட்டிமை. பகட்டு, பெண் ஒடுக்குமுறை. ஆணவம் ஆகியவற்றிற்கு எதிராகத் தன் வாழ்நாள் நெடுகிலும் போராடி வந்த மாற்கு. தனது எளிய வாழ்வின் அனுபவங்களை இந்நூலில் வரைபடமாய் விரிக்கிறார். இயற்கையோடு இயைந்த ஆன்மீக வாழ்வே தனது பேருவகை என அறிவிக்கிறார். மாற்குவின் வாழ்வனுபவப் படைப்பாக மலர்ந்துள்ள அவரது இந்தத் தன்வரலாற்று நூல், புதிய ஆன்மீக வாழ்விற்கான வரையறைகளை வழங்குகிறது. |
Login to your account.Don’t have account? Sign up