| Details description |
|---|
|
Details : ISBN : 9788123441184 Author : Dr. M. Arunachalam Weight : 100.00 gm TAMIL ILAKKIYA VARALAARU Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2021 Code no : A4471 தமிழ் இலக்கிய வரலாறு : நம் காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வு நோக்குடன் தொகுத்துக் கூறுகிறது இந்நூல் போட்டித் தேர்வினை அணுகுபவர்களுக்கு இந்நூல் கைவிளக்கு, தரவுகளும், தகவல்களும் முயங்கிச் செல்லும் இரட்டைப்புரி. இலக்கிய வரலாறுகள் மத்தியில் மாணவர்களின், ஆய்வாளர்களின், அறிஞர்களின் பாராட்டினைப் பெற்ற சிறப்புக்குரியது. பேராசிரியர் முனைவர் மு,அருணாசலம், பேராசிரியர் முனைவர் இராஜா வரதராஜா ஆகிய இருவரின் தொடர் உழைப்பில் பொலிவு பெற்றுத் திகழ்ந்திடும் நூல் இவ்விலக்கிய வரலாறு. பேராசிரியர் முனைவர் மு.அருணாசலம் திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி கிராமம் பிறப்பிடம் ஆகும். திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. (தன்னாட்சி) கல்லூரித் தமிழாய்வுத் துறையில் இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைப் படைத்தவர்: கவிஞர், இவரிடம் பதினாறு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனார். தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசு, சாகித்ய அகெதமி இளம் ஆய்வாளர் ஆகிய விருதுகளைப் பெற்ற சிறப்பிற்குரியவர். பேராசிரியர் முனைவர் இராஜா வரதராஜா தஞ்சாவூர் மாவட்டம் பனவெளி கிராமத்தில் திரு. வ.கிராஜாங்கம் நாட்டார் – திருமதி ஆண்டாள் ராஜாங்கம் நாட்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழறிவு, பயன்முறைத் தமிழ் மக்கள் தகவல் தொடர்பியல், விளம்பரவியல், பட்டினப்பாமை தெளிவுரை. தொகை அகராதி. ஒலிவேறுபாட்டு அகராதி அல்லது மயங்கொலிச்சொல் அகராதி உட்பட பதினேமு நூல்களின் ஆசிரியர். இருபத்தொரு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகும் வகையில் போட்டித் தேர்வு நூல்களைத் தந்திருப்பவர். |
Login to your account.Don’t have account? Sign up