| Details description |
|---|
|
Details : ISBN : 9788123410982 Author : Deva. Perinban Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2006 Code no : A1525 Pages : 172 தமிழர் தத்துவம் : தமிழர் தத்துவம் என்னும் இந்நூல் தோழர் தேவபேரின்பன் அவர்களின் அரிய படைப்பு. தோழர் தேவபேரின்பன் தமிழகம் கண்ட சில முக்கியமான வளர்ச்சிப் போக்குகளை எடுத்துக் காட்டுகின்றார். மணிமேகலை, நீலகேசி என்னும் இரு காப்பியங்கள் தமிழர் தத்துவ மரபுக்கு அளித்த பங்கு பற்றி விரிவாகக் கூறுகிறார். தோழர் தேவபேரின்பன் சித்தர்களைப் பற்றிச் செய்துள்ள ஆய்வு மிகச் சிறப்பானது. மருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக்கொண்டுள்ளதனால் அவற்றை ஆய்பவர்கள் உண்மை காணக் கவளமாக இருக்க வேண்டும். ஆழ்ந்து பயிலவேண்டும் என்று எச்சரிக்கின்றார். தமிழிலக்கியங்கள் வைதிகத்தின் பிரிவுகளையும் சைவத்தின் பிரிவுகளையும் எடுத்துக்கூறினாலும், தத்துவக் கருத்துகள் பதி, பசு பாசம் என்னும் கொள்கை பதினான்காம் (14) நூற்றாண்டில் தோன்றியது என்பதை கட்டிக்காட்டுவதோடு, சமண பௌத்தக் கருத்துகள் வைதிக சைவத்தால் கடன் வாங்கப்பட்டன. இருப்பினும் வைதிக சைவம் தாய்த் தெய்வ வழிபாட்டையும் சக்தி வழிபாட்டையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு முன்னேறிற்று என்பதனையும் கூறுகிறார். திருமூலருடைய திருமந்திரம் பகுதிகளை ஆராய்ந்து அவை எவ்வாறு யோகம் தாந்திரிகம் சீன தாவோயிசம் ஆகிய கருத்துகளைத் தன்வப்ப்படுத்தித் தனிப்பெரும் நூலாக மிளிர்கிறது என்பதையும் காட்டுகிறார். இந்நூலில் இடம்பெறும் பனிரெண்டு அத்தியாயங்களில் கடந்த -ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்துள்ள தத்துவம் சிந்தனைகளின் வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார். |
Login to your account.Don’t have account? Sign up