| Details description |
|---|
|
Details : ISBN : 9788123440750 Author : P.K.Ponnusamy Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : Code no : A4428 திருமூர்த்தி மண் : திருமூர்த்தி மண்’ பேராசிரியரின் ‘படுகளம்’ போன்ற இன்னொரு புதினம்தான் என்று சொல்லிவிட முடியாது. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, பெண் கல்வியை முன்வைக்கும் வகையாக இராஜேஸ்வரியின் வெற்றியும், புது வாழ்வினை நோக்கி மெல்லடி வைக்கும் அவளின் ஆழ்ந்த தைரியமும் நமது மனத்தை இனிமையாக வருடுகின்றன. துன்பியலில் அவளது திருமணமும் அவள் தோழியின் திருமணமும் முடிந்த போதும், “கிராமப்புறம் சார்ந்த இந்தப் பெண்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்’ எனும் நம்பிக்கை நமது மனத்தை மகிழ்விக்கிறது. இப்புதினத்தை மீண்டும் படித்துவிட்டு ஜாக்கிரதையாக மூடிவைக்கும்போது அசோகவனத்தில் சிறையில் இருந்தவள் தெரிகிறாள். – டாக்டர் பிரேமா நந்தகுமார் ‘படுகளம்’ போலவே இந்தப் படைப்பிலும் நம்மைச் சொக்க வைப்பது படைப்பாளி பயன்படுத்தியுள்ள கொங்கு வட்டாரச் சொற்கள். கொங்குத் தமிழின் நயங்களனைத்தையும் இதில் கொண்டுவந்து குவித்திருக்கிறார் ஆசிரியர். ஆர். ஷண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்’ தொடங்கித் தமிழில் தழைத்த கொங்குத் தற்கால இலக்கியம் பொன்னுசாமி சுரங்களிலும் கம்பீரமாய் அதன் எல்லாவித எழிலோடும் கோலோச்சுகிறது. புதினத்தை முழுமையாகப் படித்து முடிக்கும்போது இந்த உலகம் எத்தகைய மனிதர்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு நடக்கிறது என்ற பிரமிப்பு மனத்தில் எழுகிறது. தலைவர்களின் வாழ்க்கையும் பிரமுகர்களின் வாழ்க்கையும் மட்டுமல்ல. சராசரி மனிதர்களின் வாழ்க்கையும் கூடக் கொண்டாடத் தக்கதுதான் என்ற நிறைவு நம்மிடம் எழுகிறது. -டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் |
Login to your account.Don’t have account? Sign up