| Details description |
|---|
|
Details : ISBN : 9788123442532 Author : Soundra Mahadevan Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4606 Pages : 156 திருநெல்வேலி நினைவுகள் : ஒரு வரிசையற்ற வரிசையில் நினைவின் ஊற்றுக் கண் திறந்து, இன்றைய தினத்தின் தோட்டத்தில் சுனை நீர் பெருக்கும். அப்படித் திறந்திருக்கும் ஊற்றுக் கண், அப்படிப் பெருகும் தாமிரபரணி இந்தத் தொகுப்பு. பத்தாம் தசரா மட்டும் அல்ல, இது பத்து நாட்களில் எந்த நாட்களிலும் பார்க்க முடிகிற பாளையங்கோட்டை தசரா இந்த நினைவுகள்.. தசரா முடிந்து மறு நாட் காலையில் எல்லாச் சப்பரங்களும் ராமர் கோவில் திடலில் நிற்கின்றன. நானும் அங்கே நிற்கிறேன். பக்கத்தில் குடை ராட்டினம் சுற்றுகிறவரிடம் தசரா பார்க்க வந்த பையன், அவனுக்கு உரிய சுற்று முடிந்த பிறகும் ராட்டினக்காரரிடம், அண்ணாச்சி, ‘ப்ளீஸ்… ப்ளீஸ் இன்னும் ரெண்டு சுத்து சுத்தி விடுங்க, ரெண்டு இல்லாட்டா ஒரே ஒரு சுத்து சுத்தி விடுங்களேன்’என்று கேட்கிற குரல். அது அந்தப் பையனின் குரல் மட்டும் அல்ல, இதை வாசிக்கும் ஒருவருடைய குரலும் தான். பால்ய காலக் குடை ராட்டினத்தில் இருந்து, சுற்றியது போதும் என்று யாருக்காவது இறங்கத் தோன்றுமா? கல்யாணி.சி |
Login to your account.Don’t have account? Sign up