| Details description |
|---|
|
Details : ISBN : 9788123430744 Author : Prof. Durai. Gunasekaran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2015 Code no : A3377 Pages : 140 உலகம் போற்றும் சிலம்பு : மயிலாடுதுறை மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் மேனாள் துணைமுதல்வரும், இந்நாளைய தமிழாய்வுத் துறையின் தலைவருமாகிய முனைவர் துரை குணசேகரன் இயற்றிய உலகம் போற்றும் சிலம்பு என்னும் இந்நூல் அவரின் ஆய்வுச்சிறத்திற்குச் சான்று பகரும் அரிய ஆய்வு நூலாகும். சோழ வாறாட்டின் பழைய தஞ்சையில் இன்றைய திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், வடுவூர் புதுக்கோட்டையில் பிறப்பு. சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கனலக்கழகம் உள்ளிட்ட பலவிடங்களில் பயின்ற கல்வியால் தமிழ், சமூகவியல், மொழியியல், கல்வியியல் துறைகளில் நான்கு முதுகலைப்பட்டங்கள். ஆய்வியல் நிறைஞர், முனைவர் என்னும் ஆய்வுப்பட்டங்கள் பெற்றவர். தன்சார்பில் தமிழ்ச் சொற்பிறப்பியல் வளர்ச்சி வரலாறு (1997). சிறுகை அளாவிய கூழ் (2004). 1990இல் தொடங்கி அதன் மாநிலத் தலைவராகவிருந்து தமிழ்ப் பணியாற்றிவரும் தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையின் சார்பில் ஆய்வுமணிணி (2001), தான் பணியாற்றுகின்ற தமிழாய்வுத் துறையின் சார்பில் நன்செய் (2003), மாண்புகள் மிகுந்த மயிலாடுதுறை (2015) முதலான நூல்களை வெளியிட்டவர், ஈம்பதுக்கும் மேல் ஆய்வுக் கட்டுரைகள். பன்னிரு முனைவர் பட்ட ஆய்வாளர்கள், அறுபது ஆய்வியல் நிறைஞர் ஆய்வாளர்களை உருவாக்கியவர், இவரிடம் இன்று ஆய்வு செய்தோர் அறுவர். ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள். 27 ஆண்டுகளாய் தொடர்ந்து நடத்திவரும் மாணவரிதழ் இளந்தூதுவில் பத்தாண்டுகளாக ஒருங்கிணைப்பாளர், பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினர். தலைவர் உள்ளீட்ட பல பொறுப்புகளை வகித்தவர். எழுத்திற்கும் பேச்சிற்கும் இடைவெளியில்லாதவர். |
Login to your account.Don’t have account? Sign up