| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443584 Author : Marku Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4711 யாத்திரை : “இந்த ஊருல கோயில்ல ஒதுக்கப்பட்ட தனியிடத்துல தான் நம்ம ஆளுக உட்காரனும். நம்மாளுக பூசைக்கு உதவி செய்யக் கூடாது. வாசகம் வாசிக்கக் கூடாது. பாடகர் குழுவில் இருக்கக் கூடாது. பாதம் கழுவும், சடங்குல இருக்கக் கூடாது, ஞான உபதேசக் கிளாசில் நம்ம பிள்ளைக் தனியாத்தான் இருக்கணும். மாதா சப, நன்மரண சப போன்ற பக்த சபைகள்ள அவுங்களோட சேர்ந்து நம்ம பிள்ளைகளும் இருக்க முடியாது நமக்கு தனியாதான் பக்த சப வச்சுக்கிடணும். திருநாளு கொண்டாடுனா நம்ம கிட்ட வரி வாங்க மாட்டாக. நம்மளோட சேர்ந்து திருநாள், கொண்டாட மாட்டாக, நாமளா தனியாவும் கொண்டாடக் கூடாது. சப்ரத்தத் தூக்கவோ, தொடவோ கூடாது. சப்பரம் நம்ம தெருவுல வரக் கூடாது, கோயில் நிலத்த நாம குத்தகைக்கு எடுக்கக் கூடாது. கோயில் நிர்வாகத்துல நாம தலையிடக் கூடாது. தனியா நம்மளுக்குன்னு கல்லறை வச்சிக்கிட்டு அங்கதான் பொதைக்கனும். செத்துப் போன நம்ம பொணங்களை கோயிலுக்குக் கொண்டுவரக் கூடாது.” |
Login to your account.Don’t have account? Sign up