| Details description |
|---|
|
Details: Edition : 1 Category : History ISBN : 9789388973847 Author : T. Stalin Gunasekaran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Pages : 247 Publishing Year : 2014 Code no : A4248 தேச விடுதலையும் தியாகச் சுடர்களும் :சுதந்திரதினப் பொன்விழாவில் காலத்தேவையை நிறைவு செய்யும் வண்ணம், “தேசவிடுதலையும் தியாகச் சுடர்களும்’என்னும் அரிய தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இதன் தொகுப்பாசிரியர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். இளைய பாரதத்தின் தகுதி மிகுதி படைத்த பிரதிநிதியாவார். நேரத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாது, ஊர் ஊராகச் சென்று கட்டுரையாளர்களைச் சந்தித்து, கட்டுரைகளின் நல்லாய்வின் திறமும், நம்பகத் தன்மையும் மேலிட வேண்டுகோள். சமர்பித்துக் கட்டுரைகளைத் திரட்டினார். ஒருமுறை அன்று பன்முறையும் தொடர்புகொள்ள வேண்டியிருந்தாலும், சற்றும் பின்வாங்காமல், சோர்வு பாராமல்தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் பாடுபட்டது. இந்நூலுக்குக் கிடைத்த முதற் சிறப்பாகும். இந்திய தேசிய இராணுவத்தில் நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றிய ‘கேட்டன்” லட்சுமியை வட பாரதத்தில் சந்திக்கச் சென்றார். தென் பாரதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்பதற்கு கண்கண்ட சாட்சியாக இந்நூலின் தொகுப்பாசிரியர் திகழ்கிறார். சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகச் சுடர்களை வீரக்கரங்களில் உயர்த்திப்பிடித்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்துத் தந்த இளைஞர் பேரணியை புரட்சிகரமாகச் செயல்பட வைக்க வேண்டும் எனும் ஆராவேட்கை கொண்டவர் தோழர் த.ஸ்டாலின் குணசேகரன். பெ.சு.மணி ஆர்வத்தோடு, விடாப்பிடியாக தோழர் த.ஸ்டாலின் குணசேகரன் உழைத்தார். இதற்காக ஏறத்தாழ ‘பாரத் தரிசனமே’ செய்து விட்டார். உ.வே.சாமிநாத ஐயர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்ததைக் குறிப்பிடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்களையும், சான்றுகளையும் தேடி என் தோழன் ஸ்டாலின் அலைந்தது. பலனளித்தது. பலரும் பாராட்டினர். அதுவே மன நிறைவைத் தந்தது. மேலும் பணிபுரியத் தூண்டியது. அதன் விளைவாகத்தான். மலரில் வந்த வரலாற்றுக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூல் வடிவம் தந்து வெளியிடப்படுகிறது. நமக்காகப் போராடிய வீரத் தியாகிகளின் அரிய ஆற்றலை, தன்னலமற்ற சேவையை, இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய மாவீரர்களைப் பெற்றுத் தந்த நம்நாடு. இப்போதும் அதேபோன்று வீரத்தியாகிகளை எதிர்நோக்கித் தவம் இருக்கிறது. தா. பாண்டியன்
|
Login to your account.Don’t have account? Sign up