| Details description |
|---|
|
Details : ISBN : 9788123443881 Author : Subrabharathimanian Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Code no : A4742 சுற்றுச்சூழல் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணியன், கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப்பிணைந்துள்ளன. என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழை மக்கள்தான் என்பதையும் அவர் படைப்புகள் காட்டுகின்றன. இயற்கையுடனும் மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப் பூர்வமான பிணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள புறவுலகை, அதிலுள்ள உயிரினங்களை நாம் கண்டுகொள்வதேயில்லை. நம் வீட்டு பூந்தொட்டிக்கு வரும் வண்ணத்துப்பூச்சி, மரத்தில் வந்தமரும் கரிச்சான் குருவி, நீல வானம், விண்மீன்கள். மேகக்கூட்டம் எதையுமே நாம் பார்ப்பதில்லை. இன்று நம்மை வதைக்கும் சூழலியல் கொடுமைகளுக்கு இந்த அந்நியப்படுத்துதல் ஒரு முக்கிய காரணம். இந்நூலில் இடம்பெற்றுள்ள காலநிலை மாற்றம், பல்லுயிரியம் போன்ற கருதுகோள்களைப் பற்றிய கட்டுரைகள் எளிய நடையில் உள்ளன. சுற்றுச்சூழல் பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. |
Login to your account.Don’t have account? Sign up