| Details description |
|---|
|
Details : Edition : 1 Author : S.V. Rajadurai Category : Marxism ISBN : 9788123443867 Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2022 Pages : 136 Code no : A4740 இன்றைய முதலாளியம் : மார்க்ஸும் எங்கெல்ஸும் 1848 இல் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட 175ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து, அவர்கள் காலத்தில் நிலவிய முதலாளியத்தின் கட்டமைப்பு, சுரண்டல் முறை, அவற்றுக்கேற்றபடி அமைந்திருந்த இயந்திர, தொழில்நுட்ப முறைகள் ஆகியனவற்றில் 20-21ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுருக்கமாக எடுத்துரைப்பதற்காக எழுதப்பட்டுள்ள இந்த நூல் கணினித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தகவல் பரிமாற்றம் முதலியன தொழிலாளர்களைச் சிதறுபடச் செய்யும் அதேவேளை அவர்களிடமிருந்து உழைப்பைக் கறப்பதிலும் உபரி மதிப்பை அபகரிப்பதிலும் ஈவிரக்கமற்ற முறைகளை உருவாக்கியுள்ளதை விவரிக்கிறது. உலக மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை அடிமைகளாக மாற்ற முயன்று கொண்டிருக்கும் அமைப்புகள் பற்றிய, இதுவரை இந்திய மார்க்ஸிய வட்டாரங்களில் விவாதிக்கப்படாத தகவல்களை எடுத்துரைக்கிறது. எனினும் இந்த மாற்றங்களினூடாகவும் முதலாளியத்தின் அடிப்படைக் கூறுகள் யாவும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதிலிருந்து எவ்வகையிலும் மாறுபடாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உலகளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஏற்பட்டுள்ள தற்காலிகமான சரிவை ஈடுசெய்து மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் சோசலிச இலட்சியத்தை நிறைவேற்ற அவ்வியக்கங்கள் மேற்கொள்ள வேண்டியவை என்ன என்பதைச்சிந்திக்குமாறு தூண்டுகிறது. |
Login to your account.Don’t have account? Sign up