| Details description |
|---|
|
Details : ISBN : 9788123425337 Author : Su. Tamilselvi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Code no : A2894 ஆறுகாட்டுத்துறை : தமிழ்ப் பெருநிலத்தின் சிறுநிலக் கூறுகளுள் ஒன்றான நெய்தல் புலத்தினுடைய மீன்பிடி மக்களின் வாழ்க்கைச் சித்திரத்தை கடற் காற்றின் குளிர்ச்சியோடு நம் முன் விரிக்கிறது. ‘ஆறுகாட்டுத்துறை அவ்வினக்குழு மக்களிடையே தென்படும் நிர்வாக அறத்தையும், சமுத்திரவல்லி எனும் அக்குலமகளின் இல்வாழ்க்கை அறத்தையும் இணையாக விவரிக்கும் இப்புதினம் தமிழ்மண்ணின் மரபு. பண்பாடு குறித்த முக்கியமான தரவுகளையும் வழங்குகிறது. எளிமையான மீனவப் பெண்ணான சமுத்திரவல்லியை அனுபவத்தின் தகிக்கும் வெம்மை யாலும் தன் ஆளுமைத் திறனாலும் வாசக நெஞ்சில் நீங்கா இடம்பெறச் செய்துவிடுகிறார் சு.தமிழ்ச்செல்வி. மாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த.மு.எ.ச. விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆறுகாட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up