| Details description |
|---|
|
Details : ISBN : 9788123427218 Author : Ellai. Sivakumar Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2014 Pages : 52 Code no : A3068 கவிதைகளும் கவிஞர்களும் : “சமூகம் என்னைப் பொதுவுடைமையாளன் ஆக்கியது. பொதுவுடைமைக் கொள்கை என்னை மனிதன் ஆக்கியது” என்னும் சேகுவேராவின் கூற்றை உளத்தில் பதித்து இயங்கி வருபவர் தோழர் எல்லை. சிவக்குமார். இவர், மாணவப் பருவத்திலிருந்தே பொதுவுடமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு ஓவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு இன்றுவரை தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்நூலில் இயற்க்கைக் கவிஞர் என்றும், இந்தியாவின் வேர்டஸ்வொர்த் என்றும் போற்றப்படும் வாணிதாசன், ‘மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கு மாற்றாக வறுமைவயப்பட்டுத் துன்பப்பட்டபோதும் தான் ஏற்றுக்கொண்ட சோசலிசக் கொள்கையினின்று, இம்மியும் மாறாது வாழ்ந்துகாட்டிய கம்பதாசன், மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் விடுதலைப் போராட்டக்களத்தில் முன்களத் தளபதியாக விளங்கிய கவி.வெ.நாரா, காரைக்காலில் கலைகளின் மூலம் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்புரை செய்யவந்த தோழர் நாடகக் கலைஞர் சொ. சிதம்பரம் ஆகிய நால்வரின் படைப்புப் பதிவுகளை இலக்கியப் பதிவுகளாகப் பதிவுசெய்துள்ளார். |
Login to your account.Don’t have account? Sign up