| Details description |
|---|
|
Details : ISBN : 8123413270 Author : Puviyarasu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Code no : A1732 Pages : 172 எட்டுத்திசைக் காற்று : (கவிதைத் தொகுப்பு) கவிஞர். பேச்சாளர், நாடகாசிரியர், வானொலி, தொலைக்காட்சி. திரைப்படத்துறைகளில் பணியாற்றி வருபவர். இவரது ‘மூன்றாம் பிறை’ நாடகக் காவியம் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. முக்கூடன் கவிதைத்தொகுதி. தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. புல்லாங்குழலே’ – கவிதைத்தொகுதி கவிக்கோ; தேவமகள், சிற்பி அறக்கட்டளை. விருதுகள் பெற்றது. ‘மிர்தாதின் புத்தகம்’ நல்வி – திசை எட்டும் பரிசு பெற்றுள்ளது. கேரள சாகித்ய புரஸ்கார் விருதும், மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார். இவரது “மனிதன் நாடகம், அனைத்து இந்திய வானொலி நிலையங்களில் 19 மொழிகளில் ஒரே சமயத்தில் ஒலிபரப்பப்பட்டது. சேக்ஸ்பியர். கலீல்ஜிப்ரான். உமர்கய்யாம். ஓஷோ, கிரண்பேடி தாகூர். நஸ்ருல் இஸ்லாம் போன்ற பலரது படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். ஆட்சிமொழி. பயிற்சிமொழி, தமிழக எல்லைப் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றவர். இவரது கவிதைகள், மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம், ரஷ்யன், அங்கேரியம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ கமல்ஹாசனின் ‘மருதநாயகம் படத்தில் பணியாற்றி வருபவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள 77 வயதான இவர் எழுதியுள்ள நூல்கள் 80. வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முக்கியமானவர். |
Login to your account.Don’t have account? Sign up