| Details description |
|---|
|
Details : Edition : 1 Category : Essay ISBN : 9788197836305 Author : R.Selvam I.A.S Weight : 150gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 168 Code no : A5160 ஹார்வர்டு நாட்கள் : உலகின் அபாயகரமான நிலவமைப்பையும், தீவிரமான பருவநிலைகளையும் கொண்ட இமயமலை பிராந்தியம், லாகுல் ஸ்பிட்டி இந்தியாவில், லேவுக்கு அடுத்து பெரிய மாவட்டமான லாகுல் ஸ்பிட்டியின் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய முதல் தமிழரான இரா.செல்வம். பல வித்தியாசமான அனுபவங்களைத் தன் பணி வாழ்க்கையில் பார்த்தவர். தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் ஒன்றான அய்யப்பநாயக்கன்பேட்டையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளி – கல்லூரிகளில் படித்து. இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தவர் செல்வம். அவர் பணியாற்றிய களங்கள் எதுவாயினும் – மத்திய உள்துறை முதல் உரத்துறை வரை – தன்னுடைய பணிகள் வழியாக முத்திரை பதித்தவர். உலகளாவிய நிர்வாக அணுகுமுறையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் காரணமாக இடையில் அமெரிக்கா சென்று. உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் பொது மேலாண்மை பயின்றார் செல்வம். அங்கு அவருக்குக் கிடைத்த அகத்திறப்பு. ஒரு நிர்வாகியாக அவருக்குள் அபாரமான சிந்தனைகளை உருவாக்கியது. விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு. நிதி நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையையும் இந்தியாவில் எப்படி இனி நாம் பார்க்க வேண்டும் என்று அவரிடம் உருவான சிந்தனைப் பகிர்வே இந்தச் சிறுநூல் இந்திய ஆட்சியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை வாசிக்க வேண்டிய பல முக்கியமான கருத்துகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அமர்த்தியா சென. ஹாய்பிட்ஸ் என்று பல சர்வதேச ஆளுமைகள் செல்வத்துடனான உரையாடலில் கதாபாத்திரங்களாக வந்து செல்கின்றனர். தமிழில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புத்தகம் இது. இந்நூல் பேசும் நிர்வாகவியல், நாட்டை நிர்வகிப்பவர்கள் மட்டும் அல்லாது சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டியது! |
Login to your account.Don’t have account? Sign up