| Details description |
|---|
|
Details Book Name : Ippadiyum Regional Name : இப்படியும் Author : மாற்கு Edition : 1st Edition ISBN : 978-81-988105-9-5 Category : Novel Binding : Paper Binding Language : Tamil Publishing Year : 2025 Pages : 180 Code No : A5466 இப்படியும் : கற்பி! போராடு! ஒன்றுசேரி! என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ்பெற்ற மூன்று முழக்கங்களைத் தலைப்புகளாகக்கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று நெடுங்கதை களைக்கொண்ட இந்நூல், தமிழகச் சூழலில், கத்தோலிக்கத் திருச்சபையில் பெண்ணுரிமைக்கான முதல் குரலைப் பதிவு செய்கிறது. திருச்சபையில் துறவு மேற்கொள்ளும் பெண்கள், எல்லையற்ற ஆணாதிக்கத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. குருத்துவம் என்பது ஆண்களின் ஏகபோக உரிமையல்ல என்பதையும், பெண்களுக்கும் அது அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், இறையியலை ஆதாரமாகக்கொண்டு, மறுக்க முடியாத. ஆழமான விவாதங்களுடன் வலியுறுத்துகிறது. குருத்துவம் ஆண்களுக்குரியது என்ற வாதம் அடிப்படையில் ஆணாதிக்கச் சிந்தனையே என்றும் குருத்துவப் பணியை, ஆணாதிக்கக் களமாக குருக்கள் மாற்றிவைத்துள்ளனர் என்றும் சாடுகிறது. ஈராயிரம் ஆண்டு காலப் பழமைவாதங்களைக் கைவிட்டு நவீன மனித மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டு, தன்னை ஜனநாயகப்படுத்திக்கொள்வதன் மூலமும், துறவு ஏற்ற பெண்களுக்கு குருத்துவத்தை வழங்கிப் பெண்ணிய ஆற்றலை வெளிப்படுத்துவதன் மூலமும் கத்தோலிக்கத் திருச்சபை மேலும் ஆயிரம் ஆண்டு காலம் நீடிக்க முடியும் என்ற உயரிய சிந்தனைகளை உள்ளடக்கிய நெடுங்கதைகளை இந்நூல் பதிவு செய்கிறது. உண்மையில், கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில் ஒரு முக்கிய விவாதத்தை இந்நூல் தொடங்கி வைத்திருக்கிறது. |
Login to your account.Don’t have account? Sign up