| Details description |
|---|
|
Details : ISBN : 9789388050609 Author : S. V. Rajadurai Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2018 Code no : A4015 தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம் : எஸ்.வி.ராஜதுரை தமது கட்டுரைகளினூடாக இந்திய, அல்ஜீரிய, ஆங்கில, பிரெஞ்சு, இத்தாலிய. தென்னமெரிக்க கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் நம்மை உறவாட வைக்கிறார். இந்தோனீஷாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதியா ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன்முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நான்கு நாவல்களின் 1200 பக்கங்கள்) சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார். ஏறத்தாழ எண்பதாண்டுக் காலமாகப் பசுமையாக உள்ள திரைப்பட மொன்றை, அதன் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறார். நம் காலத்தில் வாழ்ந்த தமிழக இந்திய இதழியல், இலக்கிய ஆளுமைகளின் பன்முகப் பரிமாணங்களை எடுத்துக் காட்டும் அவர் மதவாத, சாதிய, பாலின, வர்க்கப் பிரச்சினைகளை மார்க்ஸிய அம்பேத்கரிய பெரியாரிய வெளிச்சத்தில் ஆழமான பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார். கலைஞர் மு.கருணாநிதி பற்றிய நினைவுக் குறிப்புகளில், தாம் பயணித்த அரசியல் பாதையை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை எடுத்துரைக்கிறார். காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வைப் பெரியார் தமக்கே உரிய அசாதாரணமான மனிதநேய, சாதி எதிர்ப்புக் கண்ணோட்டத்திலிருந்து விளக்கியதைக் கோடிட்டுக் காட்டுகிறார். |
Login to your account.Don’t have account? Sign up