| Details description |
|---|
|
Details : Edition : 3 Category : History ISBN : 9789388050296 Author : T.Stalin Gunasekaran Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 172 Code no : A3954 விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் : சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால். விவேகானந்தர் சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை. ‘விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்’ மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு தஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி! தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இதுவரை சுவாமி விவேகானந்தரைப் பற்றி தத்துவ அறிஞர்கள். வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். இந்நூல் அவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நூல் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவும் சமுதாய நோக்கம், சேவை மனப்பான்மை, பண்பாட்டு உணர்வு, உலகப்பார்வை, மனிதநேயம், சுயநலமின்மை போன்ற நற்பண்புகளை மேம்படுத்தவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆய்வறிஞர் பெ.சு. மணி சுவாமி விவேகானந்தரின் அத்தனை பரிமாணங்களையும் தொட்டுக்காட்டி, இன்றைய இளைய தலைமுறைக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வீரியமிக்க விதை விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர். இந்த விதையைத் தூவி இன்றைய இளைஞர்கள் மனத்தில் நாட்டுப்பற்றையும், சமூக அக்கறையையும். தன்னம்பிக்கையையும் பயிரிட எத்தனித்திருக்கும் சொல்லேருழவன் த.ஸ்டாலின் குணசேகரனின் முயற்சிக்கு வித்திட்ட பெருமிதத்துடன் வாழ்த்தி மகிழ்கிறேன். ‘தீனமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் |
Login to your account.Don’t have account? Sign up