| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 978-81-984459-7-1 Category : Essay Author : Ovvai Arul Weight : 500 Gram Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2025 Pages : 392 Code no : A5423 ஔவையின் தமிழமுது : எல்லாருக்கும் நல்லனவற்றை எடுத்தோதுதல் ஒளவையின் மரபாகவும், மாநிலத்து மன்னுயிருக்கெல்லாம் மலரும் கருத்துக்களைத் தங்குதடையின்றி வழங்குவதே அறிஞர் கடன் என்ற உயர்நெறியினை பத்மஸ்ரீ திரு, ஒளவை நடராசன் அவர்கள் இம்மியும் வழுவாது பின்பற்றினார் என்பது உலகறிந்த உண்மையாகும். அவர் எழுதிய முன்னுரைகள் பொன்னுரைகளாக மிளிர்ந்தன… ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்னுரைகளை, அணிந்துரைகளை எந்தையார் வரைந்துள்ளார். அவற்றைக் கடந்த பத்தாண்டுகளாகப் பல நிலைகளில் திரட்டி வைத்துள்ளேன். எந்தெந்த நூல்களில் வெளிவந்தன என்ற ஒளிப்படக் குறிப்புக்களையும் தனி நிலையில் திரட்டி வைத்துள்ளேன். அப்பாவின் முன்னுரைகளை மூழ்கிப் படித்தால் தனித்த புகழோடு விளங்கிய சான்றோர்களின் புகழை எப்படி இப்படி எடையிட்டு வரைகின்றார் என்பது வியப்பைத் தரும். பன்மணித்திரளாகப் பல்வேறு பொருண்மைகள் கொண்ட கருத்தாழமிக்க நூல்களின் தெரிவு செய்யப்பெற்ற 125 முன்னுரைகளோடு 86 ஒளிப்படங்கள் உள்ளடக்கிய 390 பக்கங்களைக் கொண்ட இந்நூல் படிப்போர் உள்ளத்தில் பன்னூறு புதிய கருத்துகளைப் பதிவுறச் செய்யும் பாங்குடையன. அப்பாவின் கருத்துகளை நறுந்தேனாக; அமிழ்தாக வடித்துத் தந்திருக்கிறோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒளவை அருள் |
Login to your account.Don’t have account? Sign up