| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 9788198250247 Category : History Author : B.Velsami, K. Vignesh Weight : 200.00gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2024 Pages : 316 Code no : A5253 இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி கா.விக்னேஷ் : சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியைச் சேர்ந்த கா.விக்னேஷ், இளங்கலைத் தமிழை, திருச்சி பெரியார் கல்லூரியிலும் முதுகலையைத் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நிறைவுசெய்தவர். புதுதில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் இளமுனைவர் பட்டம் பெற்று அங்கேயே செவ்வியல் மொழி ஒப்பாய்வாகத் ‘திணைக் கோட்பாட்டு நோக்கில் நற்றிணையும் சுபாசித ரத்னகோசப் பருவப் பாடல்களும்’ எனும் தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வை நிகழ்த்திவருகிறார். நூறும் சதகமும் (தமிழ், சமஸ்கிருதச் செவ்விலக்கிய ஒப்பாய்வு) எனும் இவரின் நூல் என்.சி.பி.எச். நிறுவன வெளியீடாக வந்துள்ளது. பெயல், மணற்கேணி, தலித், சிற்றேடு, வெட்சி, ரசமட்டம் ஆகிய இதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் ஆகியன இவரின் விருப்பமிக்கத் துறைகளாகும். தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கட்டுரை வழங்கிவரும் இவர் தமிழ் மாணவன் என்ற பெயரிலும் எழுதிவருகிறார் சமண, பௌத்த மதங்களின் வழியாகத் தான் தமிழ்மொழி உலகறியப் பெருமைபெற்றது என்ற வரலாற்று உண்மையைத் திரித்து அம்மதங்கள். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்ததாகக் கூசாமல் புளுகுவார்கள். ஒரு கட்டத்தில் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் எதிரிகள் மறைத்துவிட்டனர் என்று அழுகுணி ஆட்டம் போடுவார்கள். இன்றைய வாழ்க்கையில் மக்கள் சந்தித்து வருகின்ற சமூகப் பொருளாதார பிரச்சனைகள் பல உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் சிக்குண்டு அல்லல்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றதைக் காண்கின்றோம். இவ்வாறு மக்களை வாட்டுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சிந்தனைகளை முன்னிறுத்தி உரையாடுவதுதான் மக்கள்மீது அன்புள்ளம் கொண்டவர்களுக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற மன வேகம்கொண்ட அறிஞர்களுக்கும் நியாயமான செயலாக இருக்க முடியும். பொ.வேல்சாமி : தமிழ்நாட்டு வரலாற்றில் மதரீதியான போராட்டங்களே இல்லை; வெள்ளையர்கள் + கொள்ளையர்கள் + கொலைகாரர்கள்; தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் யார்? பழந்தமிழ் இலக்கியம் கூறும் யானைக்கறி விருந்து; முட்டை முந்தியதா கோழி முந்தியதா? கடவுள் இல்லாத சமயம்; சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் ஓரங்கட்டப்பட்டதும் ஒழிக்கப்பட்டதும் ஏன்? பிராமணரான நச்சினார்க்கினியர் நான்கு வேதங்களை ஏன் மறுத்தார்? சைவ சித்தாந்தம் என்பது தமிழருக்கேயான தத்துவ மரபா? உள்ளிட்ட அரசியல், தத்துவ உரையாடல்களை உரிய தரவுகளுடன் விளக்கும் தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது. இத்துறைகளில் ஆய்வுகளை நிகழ்த்திட பல ஆய்வுக் களங்களையும் திறந்துவிடுகிறது |
Login to your account.Don’t have account? Sign up