| Details description |
|---|
|
Details : Category : Short Stories ISBN : 9788123414805 Author : Aattanathi Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2009 Pages : 120 Code no : A1876 அவளா இவள் : ஆட்டனத்தியின் சிறுகதைத் தொடக்கம் ஒரு வகையான உந்துதலான நிலையில் அமையும். அது ஒரு சிறப்பம்சம். ஜெயகாந்தனிடம் அதை அழுத்தமாகக் காண முடியும். எந்தப் படைப்பும் ஏதாவது ஒரு நுணுக்கமான செய்தியைத் Messeger தாங்கி வெளிப்படுவதாக அமைய வேண்டும். சங்க இலக்கியம் முதல் பாரதி வளர அதற்காகத் தான் படைக்கப்பட்டதாகவும், வெறும் இயக்கியம் இலக்கியத்துக்காக என்றில்லாமல் வாழ்க்கைக்காகத் தான் படைக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமான நம்பிக்கை கொண்ட தமிழ்ப் பாரம்பரியத்தில் ஆழ்த்த நம்பிக்கை கொண்டவர் ஆட்டனத்தி, அதனால் தான் சாதாரண துப்பறியும் உள்ளீடு கொண்ட சிறுகதையில் கூட ஆண்களின் பலஹீனத்தையும், பெண்மையின் மகத்துவத்தையும் கோட்டோவியம் போல் வரைந்து காட்டுகிறார் என்று சொல்ல வேண்டும். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த உள்ளீடும், அதற்குரிய பின்னணியும், பின்னணியை மையப்படுத்தும் பாத்திரமும் ஒன்றை ஒன்று மிளிரச் செய்வதாகவும் ஒன்றிலிருந்து ஒன்று மிளிர்வதாகவும் தேடிப் பிடித்து உள்ளார். ‘இராத்திரியில் தூக்கம் இல்லை’ என்ற சிறுகதை அந்தத் தேடலில் கிடைத்த வேட்டை (கொங்கு மொழியில் சொல்வதென்றால் சேவல் கோச்சையில் ஆட்டனத்தி பெற்ற கோச்சை ஆகும். |
Login to your account.Don’t have account? Sign up