| Details description |
|---|
|
Details : ISBN : 8123413572 Author : C.R. Ravindran Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2008 Code no : A1759 Pages : 160 ஓவ்வொரு நாளில் ஓரு நாள் : தமிழின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாவல் என தொடர்ந்து இயங்கி வருகிறார். பழைய வானத்தின் கீழே, அங்குத்தாய், காலம், ஈரம் கசிந்த நிலம், மஞ்சுவெளி, கண்ணில் மின்னல் முதலான பதிமூன்று நாவல்களைப் படைத்துள்ளார். தவிர எட்டு சிறுகதைத் தொகுப்புகள் இவருடையவை. ‘ஈரம் கசிந்த நிலம்’ நாவலுக்காக கல்கத்தா “பாரதிய பாஷா பரிஷத்’ விருது. கோவை ‘கஸ்தூரி சீனிவாசன்’ விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நாவல் வானொலி நாடக வடிவிலும், தொலைக்காட்சித் தொடர் வடிவிலும் வெளியாகியுள்ளது. ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டதாரியான இவரது தாய்மொழி தமிழ். மலயாள மொழியும் அறிந்தவர். வாழ்வியலுக்கு முக்கியத்துவம் அளித்து தன் படைப்புக்களுக்குக் கலைவடிவம் கொடுத்து வருகிறார். பாரதியார் பல்கலைக்கழகம் இவருக்கு ‘தமிழ்ச் சான்றோர் விருது’ வழங்கிப் பாராட்டியுள்ளது. |
Login to your account.Don’t have account? Sign up