| Details description |
|---|
|
Details : ISBN : 9788123440200 Author : Indira arasu Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2002 Code no : A4373 தாளடி வயல் : “தாளடி வயலில்” நடப்பட்டுள்ள கவிதைகளுக்கு உயிர் இருக்கிறது. உண்மையும் இருக்கிறது. தனி மனித அனுபவங்களே உலகின் ஆகச் சிறந்த படைப்பிலக்கியமாகிறது என்கிற கூற்றிற்கு இணங்க, ஆற்றல் மிகுந்த சொற்களால் இயல்பாகப் பொங்கி வழிகிற நடையில் காட்சி இலக்கியமாக, ஒவ்வொரு வரியும் மனதில் விரிகிறது. ஒரே புள்ளியில் வட்டமடிக்காமல் வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்குள்ளும் பயணித்திருக்கிறார். தான் வாழ்கிற சமகாலத்தை ஆழமாகக் கண்டுணர்ந்து, நீதியின் பக்கம் நின்று எழுதியுள்ளார். தான் வாழ்கிற சமூகத்தில் மக்களின் மீது அன்பு கொண்ட தோழர்கள் யார்? மக்களை அழித்தொழிக்கும் பகைமைகள் எவை? என்பதைத் தெளிவாக உணர்ந்து எளிமையான சொற்களின் மூலம் தனக்கே உரித்தான தனித்துவ ஆளுமையுடன் கவிதைகளைப் படைத்துள்ளார். கவிஞர் இந்திரா அரசு சோழன் மு.களஞ்சியம் திரைப்பட இயக்குநர். |
Login to your account.Don’t have account? Sign up