| Details description |
|---|
|
Details : ISBN : 9788123424934 Author : I. Shanmukadas Translator : Yuma Vasuki Weight : 100.00 gm Binding : Paper Back Language : Tamil Publishing Year : 2013 Pages : 144 Code no : A2855 வனத்திற்கும் நதிக்கும் செல்லும்போது : இந்த நூல் தரும் வாய்ப்பில் நீங்கள் ரித்விக் கட்டக் எனும் கலை நாயகரின் ஆன்மாவை உணர்கிறீர்கள். இந்த முற்றத்தில்,அவரது குழந்தைமையைக் கொண்டாடுகிறீர்கள். அவரது கலையின் சாத்தியங்களறிந்து வியந்துபோகிறீர்கள். அவரது மனப்போக்குகள் உங்களுக்குப் புதிராக இருக்கின்றன. அவரது வாழ்வு குறித்து சஞ்சலம் கொள்ளவும் கூடும். திரைப்படம் குறித்து பகிரப்படும் சிந்தனைகளில் ஆழ்ந்துபோகிறீர்கள். அவர் காட்டும் மனித வாதைகள் உங்களை உறைய வைக்கின்றன. பிறகு, திரை சித்திரிப்பின் பாடங்களைப் புரட்டுகிறீர்கள். உங்கள் அரும்பொருள் தொகுப்பிற்கென இங்கிருந்து பலவற்றை சேகரித்துக்கொள்கிறீர்கள். பாருங்கள். இவரை. இந்த ரித்விக் கட்டக்கை, இந்த மாமனிதனை, இந்த அபூர்வ கலைப் போராளியை… அவர் உங்களுக்கு உருத் துலங்கி துல்லியமாகுந்தோறும் அவர் மீது உங்களுக்கு, கட்டற்ற நேசம் பெருகுகிறது. கம்பீரமாய் “தோழரே!” என்றழைத்து கரம் பற்ற முற்படுகிறீர்கள். ஆயினும் உங்கள் மனம் கரைந்துருகுகிறது. விழிகளில் கண்ணீர் துளிர்க்கிறது… |
Login to your account.Don’t have account? Sign up