| Details description |
|---|
|
Details : Edition : 1 ISBN : 9788123446110 Author : Dr.Y. Gnana Chandra Johnson Binding : Paper Back Weight : 200gm Language : Tamil Publishing Year : 2024 Pages : 600 Code no : A4987 கிறித்தவக் காப்பியங்கள் : சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்த் துறையின் மேனாள் தலைவர்; நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர்; நூலாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர் என்னும் பன்முகத் தன்மை உடையவர். இவரது நூல்களுள் கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள், கிறித்தவச் சிற்றிலக்கியத் திரட்டு. எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை, வேதநாயக சாஸ்திரியார், கிறித்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் – ஓர் ஆய்வுப் பதிப்பு, அருட்பணியாளர் இராபர்ட் கால்டுவெல், ஜெர்மானிய இறைத் தொண்டர் ரிங்கல்தௌபே என்பன குறிப்பிடத்தக்கவை. இந்நூல் 48 கிறித்தவத் தமிழ்க் காப்பியங்களை அறிமுகப்படுத்துகிறது. தமிழுக்கும் கிறித்தவத்திற்கும் எவ்வளவு அழகான, ஆழமான, அழுத்தமான பரந்துபட்ட உறவாடல் இருந்துள்ளது என்பதை இக்காப்பியங்கள் பிரதிபலிக்கின்றன. இவை இறைநெறிக் காப்பியங் களாக மலர்ந்து, கிறித்தவ வீரத்தையும், கிறித்தவ வாழ்வியல் விழுமியங்களையும் தம் காப்பியப் பின்னணியில் அமைத்து, உயர் தனிப் படைப்புகளாக ஏற்றம் பெற்றுள்ளன. காப்பியங்களாகவும், கதைபொதிப் பாடல்களாகவும், தொடர்நிலைச் செய்யுட்களாகவும், வாழ்க்கை வரலாற்றுக் காப்பியங்களாகவும், காப்பியத் துணுக்கு களாகவும், மொழிபெயர்ப்புக் காப்பியங்களாகவும் கதை சொல்லும் போக்கில் இக்காப்பியங்கள் அமைந்துள்ளன. |
Login to your account.Don’t have account? Sign up